This Article is From Nov 29, 2018

''செவ்வாய்க்கு யாரை முதலில் அனுப்புவது'' எலான் மஸ்க் - மஹிந்திரா உரையாடல்!

எலான் மஸ்க்குடனான ஆனந்த் மஹிந்திராவின் உரையாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

''செவ்வாய்க்கு யாரை முதலில் அனுப்புவது'' எலான் மஸ்க் - மஹிந்திரா உரையாடல்!

இருவரின் உரையாடலில் யாரை செவ்வாய்க்கு அனுப்புவது என்ற கேள்வி பிரதானமாக இருந்தது.

New Delhi:

செவ்வாய்க்கு மனிதரை அனுப்பும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இதற்கு இந்திய நிறுவனமான மஹிந்திரா குழுமம் ஒத்துழைப்பு தரும் என அதன் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். அதனை உறுதி செய்யும் விதமாக ட்விட்டரில் எலான் மஸ்க்குடனான அவரது உரையாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இருவரின் உரையாடலில் யாரை செவ்வாய்க்கு அனுப்புவது என்ற கேள்வி பிரதானமாக இருந்தது. அது குறித்து இவர்கள் விவாதித்தனர், "மஹிந்திரா தனது ட்விட்டில் கவிஞர்களை தான் முதலில் அனுப்ப வேண்டும், ரியல் எஸ்டேட் காரார்களை அல்ல'' என்றார். 

எலான்  மஸ்க் தனது பதிலில் ''பொறியாளர்கள், கலைஞர்கள் & கிரியேட்டர்களை தான் அனுப்ப வேண்டும். காரணம் அவர்களால் தான் நிறைய விஷயங்களை கட்டமைக்க முடியும்" என்றார்.

மஹிந்திரா தனது உரையாடலை ஒரு பதிவோடு முடித்து கொண்டார். அதில் ''கவிஞர்களை அனுப்பவில்லை என்றால், அங்கு மற்றவர்கள் ஏன் செல்ல வேண்டும் என்பதை யாரும் அறிய முடியாது'' என்று கூறினார்.

எலான் மஸ்க்கும், மஹிந்திராவும் நீண்ட நாட்களாகவே ஒருவரையொருவர் ட்விட்டரில் தொடர்கின்றனர். எலான் மஸ்க் சமீபத்திய பேட்டியில் "மனிதனை அனுப்புவதற்கு எல்லா வகையான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன" என்று கூறியுள்ளார்.

.