This Article is From Dec 04, 2018

பணமிருந்தா...? இதையெல்லாமா விண்வெளிக்கு அனுப்புவீங்க!

இறந்தவர்களின் நெருங்கியவர்கள் அனுப்பும் அஸ்திகளை மரியாதையுடனும் கவனத்துடனும் பெட்டகத்தில் வைத்து விண்ணில் ஏவப்படும்

பணமிருந்தா...? இதையெல்லாமா விண்வெளிக்கு அனுப்புவீங்க!

ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 (Space X Falcon 9) வகை ராக்கெட் மூலம் சாம்பல்கள் கொண்டு செல்ல படுகிறது.

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விண்வெளிக்கு இறந்த நபர்களின் சாம்பலை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

எலூசியம் ஸ்பேஸ் எனப்படும் தனியார் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 (Space X Falcon 9) வகை ராக்கெட்டில் மனிதர்களின் சாம்பல்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல உள்ளதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து இறந்தவர்களின் நெருங்கியவர்கள் அவர்களின் சாம்பலை (2,500 டாலர்கள்) அதாவது 1,76,187 இந்திய ரூபாய் மதிப்பு செலவில் விண்வெளிக்கு அனுப்ப முன்பதிவு செய்துள்ளனர்.

இன்னும் சில நாட்களில் விண்ணில் செலுத்தப்பட உள்ள இந்த ராக்கெட் போர் வீரர்கள், விண்வெளி வீரர்கள், வானவியல் ஆர்வலர்கள் என முக்கிய பிரமுகர்களின் சாம்பல்களை கொண்டு செல்ல உள்ளது.

இறந்தவர்களின் நெருங்கியவர்கள் அனுப்பும் அஸ்திகளை மரியாதையுடனும் கவனத்துடனும் பெட்டகத்தில் வைத்து விண்ணில் ஏவப்படும்.

தற்போது செலுத்தப்படும் இந்த ராக்கெட்டில் 100 நபர்களின் சாம்பல்களை மட்டுமே அனுப்ப அனுமதிக்கப்படும் என எலூசியம் ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்தது.

மேலும் இந்த ராக்கெட்டுகளை போனில் உள்ள செயலியை வைத்து கண்காணிக்க முடியும் எனவும் இந்த ராக்கெட் சாம்பலை விண்ணில் செலுத்திவிட்டு பூமியை நான்கு ஆண்டுகள் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் 2012-ல், சுமார் 320 நபர்களின் சாம்பல்களை விண்வெளிக்கு ஒரு நிறுவனம் அனுப்பியது கூடுதல் தகவல்.

 

Click for more trending news


.