மார்கன் போராட்டக்காரர்களை குறி வைத்துத் தாக்குகிறார். மேலும், அதிகாரம் படைத்தவர்கள், வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Paris: மஞ்சள் புரட்சியை முடிவுக்கு கொண்டு வரச்சொல்லி ப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மார்கான் தெரிவித்துள்ளார். "அரசுக்கு எதிரான போராட்டமாக கடந்த சில வாரங்களாக தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதே நாட்டுக்கு நலன் பயக்கும்" என்று கூறியுள்ளார்.
4 வாரங்களாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்துக்கு பின் 8 மணிக்கு மக்களை சந்தித்து அதிபர் பேசுவார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அவை மீண்டும் கலவரத்தை பாரிஸ் மற்றும் மற்ற நகரங்களில் வெடிக்க செய்தது. மார்கன் போராட்டக்காரர்களை குறி வைத்துத் தாக்குகிறார். மேலும், அதிகாரம் படைத்தவர்கள், வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு உடனடியாகவும், நிரந்தர முடிவும் அரசு விரைவில் காணும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வர்த்தகர்களையும், வணிக நலச்சங்க தலைவர்களையும் அதிபர் சந்தித்து பேசியுள்ளார்.
"போராட்டக்காரர்களால் நிறைய இடங்கள் தாக்கப்பட்டுள்ளன. நிறைய சேதங்கள் ஏற்பட்டுள்ளது" என அரசு தெரிவித்துள்ளது. எரிபொருள் வரிகளை அதிகப்படுத்தியதால் போராட்டம் வெடித்தது. அதேபோல் இதனை காரணமாக வைத்து வரி பிரச்னை துவங்கி மார்கன் பதவி விலக வேண்டும் என்பது வரை பல காரணங்களுக்காக துவங்கியுள்ளனர்.
யூரோப்பா ரேடியோவுக்கு ப்ரான்ஸ் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள பேட்டியில் ''நாங்கள் மக்களை தவறாக கணித்துவிட்டோம். பாரிஸ் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு அவர்களின் கோபத்தை புரிந்து கொள்ள முடியவில்லை" என்றார்.
இந்நிலையில் ''இந்த பேரழிவு முடிவுக்கு வரவேண்டும். அதிபர் கட்டாயம் பேச வேண்டும்'' முன்னாள் பிரதமர் ட்விட் செய்துள்ளார்.
நவம்பர் 17ம் தேதி முதல் போராட்டங்கள் துவங்கி நடைபெற்று வருகின்றன. 1.36 லட்சம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பாரிஸில் 10000 பேர் மஞ்சள் உடை அணிந்து போராடினர். அரசுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற நிலை உருவாகியுள்ளதாக 2000க்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடி கோஷமிட்டனர்.