Iran Plane Crash: "இந்த மொத்த தேசமும் உங்களுடன் நிற்கிறது, இன்று, நாளை, வரும் அனைத்து ஆண்டுகளிலும் உங்களோடு நிற்கும்"
Edmonton: Iran Plane Crash: ஈரான் ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்ட பயணிகள் விமானத்தில் இறந்தவர்களுக்கு நீதி பெறுவது உறுதி என்று உருக்கமாக பேசியுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்.
முன்னதாக ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை யாரும் எதிர்பாராத விதமாக அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின் பேரில் கொன்றது அந்நாட்டு ராணுவம். அதைத் தொடர்ந்து ஈரான், ஈராக்கிலிருந்த அமெரிக்க ராணுவத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் நடந்த அதே நாளில், ஈரானிலிருந்து உக்ரைனுக்கு சென்று கொண்டிருந்த உக்ரைனின் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 176 பேரும் மரணமடைந்தார்கள்.
உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் ஈரானின் பங்கு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. அதிபர் ட்ரம்ப் மட்டுமல்லாமல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடும், “உக்ரை விமான விபத்துக்கு ஈரான் காரணமாக இருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது,” எனறார். இதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் ஈரான், “உக்ரைன் விமானத்தைத் தவறுதலாக நாங்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டோம்,” என்று பகீர் கிளப்பும் விளக்கத்தைக் கொடுத்தது. இதனால் பிரச்னை பூதாகரமாகியுள்ளது.
இறந்த 176 பேரில் 56 பேர் கனட நாட்டுக் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 40 ஆண்டுகளில் இப்படியொரு இழப்பை கனடா சந்தித்தது கிடையாது.
“நீங்கள் மிகவும் தனிமையாக இருப்பதாக நினைக்கலாம். ஆனால், நீங்கள் தனிமையில் இல்லை. இந்த மொத்த தேசமும் உங்களுடன் நிற்கிறது, இன்று, நாளை, வரும் அனைத்து ஆண்டுகளிலும் உங்களோடு நிற்கும்,” என்று பயணிகள் விமான விபத்து நடந்த அடுத்த நாள் தெரிவித்தார் ட்ரூப்.
“இந்த பேரிழப்பு நடந்திருக்கக் கூடாது. இந்த மோசமான நேரத்தில் என் முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள்தான் இந்த விவகாரத்தில் நீதியைப் பெறுவதற்கு எங்களுக்குத் துணையாக இருக்கிறீர்கள்,” என்று சம்பவம் குறித்து தீர்க்கமாக பேசியுள்ளார் ட்ரூட்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)