புத்காம் மாவட்டத்தில் என்கவுன்ட்டர் நடைபெற்றிருக்கிறது
Srinagar: ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ள என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பத்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குத்போரா என்ற கிராமத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.
கொல்லப்பட்டவர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது இன்னமும் உறுதி படுத்தப்படவில்லை.
முன்னெச்சரிக்கையாக பத்காம் மற்றும் புல்வாமா ஆகிய மாவட்டங்களில் அதிகாரிகள் செல்போன் சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளனர்.