ராமேஸ்வரத்தில் அபாய நிலையில் இருக்கும் உயிரினமான கடல் அட்டையை, 700 கிலோ அளவுக்கு கடத்த முயற்சி நடந்தது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து இன்று அதிகாலை கடற்படை பாதுகாப்பு அதிகாரிக்களுக்கு தகவல் கிடைத்தது. ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இந்த கடத்தல் நடக்க இருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்தனர். இதையடுத்து, 700 கிலோ கடல் அட்டையை 2 நபர்கள் கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது.
அவர்கள் இருவரை கைது செய்த அதிகாரிகள், 700 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரிடத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடற்படை பாதுகாப்பு அதிகாரிகள்.