This Article is From Aug 06, 2019

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து: சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி!

மக்களவையிலும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் மசோதைவை அமித்ஷா தாக்கல் செய்தார், தொடர்ந்து இதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

Advertisement
தமிழ்நாடு Written by

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறந்த அந்தஸ்தான சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, இன்று மக்களவையிலும் இந்த மசோதைவை அமித்ஷா தாக்கல் செய்தார், தொடர்ந்து இதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மறுசீரமைப்பு மசோதாவுக்கு அதிமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவும் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் கருத்து ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரை ஒருதலைப்பட்சமாக பிரித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சிறையில் அடைத்து, நமது அரசியலமைப்பை மீறுவதன் மூலம் தேசியம் வளாராது. இந்த நாடு, அதன் மக்களால் உருவாக்கப்பட்டது. நிலங்களால் அல்ல. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது நமது தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ராகுல் தெரிவித்துள்ளார். 

Advertisement

இந்நிலையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கண்டித்து சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி மற்றும் சுப.வீரபாண்டியன், ஹைதர் அலி உள்ளிட்ட ஏரளமானோர் பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி செல்லுகின்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

Advertisement