This Article is From Jun 22, 2018

விஜய் மல்லையாவை கட்டுக்குள் கொண்டுவர புது அஸ்திரம்… எடுபடுமா அரசின் யுக்தி?

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை கட்டுக்குள் கொண்டு வர ஒரு புதிய யுக்தியை கையாண்டுள்ளது மத்திய அரசு.

விஜய் மல்லையாவை கட்டுக்குள் கொண்டுவர புது அஸ்திரம்… எடுபடுமா அரசின் யுக்தி?

ஹைலைட்ஸ்

  • மல்லையாவுக்கு உலகம் முழுவது ரூ.12,500 கோடியில் சொத்து உள்ளது
  • சமீபத்தில் அமலாக்கத்துறை மல்லையா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது
  • லண்டனிலிருந்து தொடர்ந்து வழக்காடி வருகிறார் மல்லையா
New Delhi: இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை கட்டுக்குள் கொண்டு வர ஒரு புதிய யுக்தியை கையாண்டுள்ளது மத்திய அரசு.

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, தேசிய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப கொடுக்கமல் இருக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். அவர் மீது சிபிஐ வழக்குத் தொடுத்தது. ஆனால், கைது செய்யும் முன்னரே இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றார் மல்லையா. தொடர்ந்து அங்கிருந்து அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்திய அரசும் சிபிஐ அதிகாரிகளும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் அவர் தொடர்ந்து இங்கிலாந்தில் இது தொடர்பான வழக்கில் வாதாடி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டு அன்றே பிணையில் வெளி வந்தது குறிப்பிடத்தக்குது. தொடர்ந்து அவர் பிணையில் தான் இருந்து வருகிறார். 

இந்நிலையில், மும்பையில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றில் இந்திய அமலாக்கத் துறை, மல்லையாவுக்கு உலகம் முழுக்க இருக்கும் 12,500 கோடி ரூபாய் மதிப்பிலுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்க ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. இதில், புதிதாக இந்திய அரசு அமல் செய்துள்ள, ‘நிதி சார்ந்து குற்றம் புரியும் ஃபயூஜிடிவ்’ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது அமலாக்கத் துறை.

இதற்கு முன்பு வரை, பண மோசடியில் ஈடுபட்டு நாட்டிலிருந்து தப்பித்து ஓடிய நபர்களின் சொத்துகளை முடக்க பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, வழக்கு விசாரணை முடிந்தால் தான் சொத்துகளை முடக்க முடியும் என்ற நிலைமை இருந்தது. தற்போது, இந்த நிலைமை மாற்றப்பட்டு உள்ளது.

இதனால், சீக்கிரமே மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
.