Read in English
This Article is From Oct 25, 2018

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலின் அலுவலகத்தில் இன்று மதியம் 2 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

Advertisement
இந்தியா

மதியம் 2 மணி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

New Delhi:

சர்வதேச அளவில் மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரங்களை ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கவனித்து வருகிறது. இதன் அலுவலகம் பெங்களூரிலும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மதியம் 2 மணி முதல் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது வெளிநாட்டு பணம்பெறுதல் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக ஆம்னெஸ்டி அமைப்பு முறைகேடு செய்திருந்ததாக சந்தேகம் எழுந்தது. இந்த விவகாரத்தில் கடந்த 2014 மே முதல் ஆகஸ்ட் 2016 வரை ரூ. 36 கோடி பணம் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று 2 வாரங்களுக்கு முன்பாக பெங்களூருவை சேர்ந்த ஒரு அரசு சாரா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வெளிநாட்டு பணத்தை பெற்றுக் கொண்டதில் மோசடி நடந்திருப்பதாக சந்தேகம், சட்டவிரோத வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக அந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 

Advertisement
Advertisement