This Article is From Apr 21, 2019

எஞ்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதிகள் விரைவில் வெளியீடு! மேலும் விவரங்கள்!!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதளம் tnea.ac.in –ல் அறிவிக்கை (Notification) வெளியாகும்.

எஞ்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதிகள் விரைவில் வெளியீடு! மேலும் விவரங்கள்!!

அறிவிக்கை நாளை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

New Delhi:

2019-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான அறிவிக்கை (Notification) நாளை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறியியல் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் மே 2-ம்தேதி முதல் தொடங்கும்.

இந்த ஆண்டு 1.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அண்ணா பல்கலை., அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும்.

B.E/ B.Tech/ B.Arch  ஆகிய படிப்புகளுக்கு கடந்த 1997-ம் ஆண்டிலிருந்து ஒற்றைச் சாளர முறைப்படி அண்ணா பல்கலைக் கழகம் கவுன்சிலிங் நடத்தி வருகிறது.

முந்தைய அறிவிக்கையின்படி, ஒரு மாணவர் ஒரேயொரு விண்ணப்பம் மட்டுமே ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.

பொறியியல் சேர்க்கைக்கு அதிகாரப்பூர்வ இணைய தளமான tnea.ac.in –ல் நாளை விவரங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

2 நாட்களுக்கு முன்பாக 12-ம் வகுப்பு முடிவுகள் வெளியாகின. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019 – கால அட்டவணை

அண்ணா பல்கலை. அளித்த தகவலின்படி ஏப்ரல் 22-ல் ஆன்லைன் அப்ளிகேஷன் வரவேற்கப்படுகின்றன.

மே 2-ம்தேதி முதல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

மே 31- விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி.

ஜூன் 3-ல் ரேண்டம் எண்கள் வழங்கப்படும்.

ஜூன் 6-11-ம்தேதி வரையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்

ஜூன் 17 – ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படுகிறது.

ஜூன் 20- மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங்

ஜூன் 21 – முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகளுக்கான கவுன்சிலிங்

ஜூன் 22 – விளையாட்டு வீரர்களுக்கு கவுன்சிலிங்

ஜூலை 3-28 – அகாடமிக் பிரிவுக்கான கவுன்சிலிங்

ஜூலை 25-28 – வொகேஷனல் பிரிவுக்கான கவுன்சிலிங்

ஜூலை 29 – கூடுதல் கலந்தாய்வு

ஜூலை30 – எஸ்.சி.ஏ., எஸ்.சி. பிரிவுகளுக்கு கலந்தாய்வு

ஜூலை 30 – கவுன்சிலிங் நிறைவு

.