மகளிர் உலகக் கோப்பை டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்தின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 85 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்க தரப்பில் 3 வீராங்கனைகள் மட்டுமே இரட்டை இலக்கை எட்டினர்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர் சைவேர் 4 ஓவர்கள் வீசி, 20 டாட் பால்களுடன் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மற்றொரு பந்துவீச்சாளரான ஷ்ருப்ஷோல் 20வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
அடுத்து பேட் செய்த இங்கிலாந்து பெண்கள் அணி 14.1 ஓவரிலேயே இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சைவேர் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.