This Article is From Jun 13, 2020

'சீனாவுடனான எல்லைப் பகுதி முழு கட்டுப்பாட்டில் உள்ளது' - ராணுவ தலைமை தளபதி தகவல்

கிழக்கு லடக்கின் பங்கோங் ஏரி பகுதியில் சீன ராணுவத்தினர் அத்து மீறி நுழைந்ததால் கடந்த மாதம் முதற்கொண்டு பதற்றமான சூழல் எல்லையில் காணப்படுகிறது.  இந்த பகுதியில் ஹெலிகாப்டர் மற்றும் மோட்டார் படகுகள் மூலமாக சீன ராணுவத்தினர் ரோந்து  மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

'சீனாவுடனான எல்லைப் பகுதி முழு கட்டுப்பாட்டில் உள்ளது' - ராணுவ தலைமை தளபதி தகவல்

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, இரு  நாட்டு படைகளும் பின் வாங்கிக் கொண்டன.r

ஹைலைட்ஸ்

  • "All perceived differences that we have will be set to rest": Army Chief
  • Significant number of Chinese troops have pulled back by 3 kms: Sources
  • Tensions with China spiked after reports of skirmishes in Ladakh
New Delhi:

இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றம் நீடிப்பதாக தகவல்கள்  வரும் நிலையில்,  சீனாவுடனான  எல்லைப்  பகுதி முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவானே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'சீனாவுடனான நமது எல்லைப் பகுதி ராணுவத்தின முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. சீனா ராணுவ அதிகாரிகளுடன் நாம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினோம். இது உயர் மட்டம் முதல் உள்ளூர் வரையிலான அளவுக்கு இருந்தது. நமது எல்லை பாதுகாப்பாக உள்ளது.

இந்தியா - சீனா எல்லை விவகாரங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலமாக பேசித் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்' என கூறியுள்ளார்.

கிழக்கு லடக்கின் பங்கோங் ஏரி பகுதியில் சீன ராணுவத்தினர் அத்து மீறி நுழைந்ததால் கடந்த மாதம் முதற்கொண்டு பதற்றமான சூழல் எல்லையில் காணப்படுகிறது.  இந்த பகுதியில் ஹெலிகாப்டர் மற்றும் மோட்டார் படகுகள் மூலமாக சீன ராணுவத்தினர் ரோந்து  மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

பங்கோங் ஏரியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் சீன ராணுவம் விமானப்படைத் தளத்தை அமைக்கும் காட்சிகள் செயற்கைகோள் படத்தின் மூலமாக தெரியவந்தது. 

இதன் தொடர்ச்சியாக கடந்த 6-ம்தேதி இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். 

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, இரு  நாட்டு படைகளும் பின் வாங்கிக் கொண்டன. இந்த நிலையில் எல்லைப் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ராணுவ தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.

இந்தியா சீனா இடையே 3,488 கிலோ மீட்டர் நீளத்திற்கு நில எல்லை அமைந்திருக்கிறது.  இங்கு பல  கிலோ மீட்டர் தொலைவில் வேலி  அமைக்கப்படாததால் அவ்வப்போது பிரச்னைகள் எழுகின்றன. 

.