This Article is From Jun 05, 2019

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த டாக்டர் தம்பதியின் மகன்!! சமூக வலைதளங்களையே பயன்படுத்தாதவர்!

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த நளின் கந்தல்வால் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளி வரத் தொடங்கியுள்ளன.

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த டாக்டர் தம்பதியின் மகன்!! சமூக வலைதளங்களையே பயன்படுத்தாதவர்!

720 மதிப்பெண்களுக்கு கந்தல்வால் 701 மதிப்பெண்களை எடுத்துள்ளார்.

New Delhi:

ராஜஸ்தானை சேர்ந்த டாக்டர் தம்பதியின் மகன் நளின் கந்தல்வால் நீட் தேர்வில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். அவரது வெற்றி குறித்த சுவாரசிய தகவல்கள் வெளி வரத் தொடங்கியுள்ளன. 

மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண்களை எடுத்து ராஜஸ்தானை சேர்ந்த நளின் கந்தல்வால் முதலிடம் பிடித்துள்ளார். 

வெற்றி குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'நான் கடந்த 2 ஆண்டுகளாக எனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனது பெற்றோர் மருத்துவர்கள். எனது மூத்த சகோதரர் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். 

அவர்கள் எனக்கு முழு ஆதரவாக இருந்தார்கள். எனது வெற்றிக்கு ஆசிரியர்களும் முக்கிய காரணம். தினமும் நான் 7 முதல் 8 மணி நேரம் படிப்பேன்.'  என்று கூறினார். 

ராஜஸ்தானில் மொத்தம் 98,757 மாணவர்கள் நீட் தேர்வுக்காக பதிவு செய்தனர். அவர்களில் 93,149 பேர் தேர்வை எழுதினர். இதில் 64,890 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதற்கிடையே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றதால் தமிழகத்தை சேர்ந்த 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

.