Read in English
This Article is From Aug 09, 2018

தாஜ் மஹாலுக்கான நுழைவுக் கட்டணம் உயர்வு!

தாஜ் மஹால் மற்றும் பிற வரலாற்றுச் சிறுப்புமிக்க இடங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் அதிகரித்துள்ளது

Advertisement
நகரங்கள்
Agra:

தாஜ் மஹால் மற்றும் பிற வரலாற்றுச் சிறுப்புமிக்க இடங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் அதிகரித்துள்ளது.

இந்திய குடிமக்கள் இனி வரலாற்றுச் சிறுப்புமிக்க இடங்களைக் காண 10 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் வெளிநாட்டினர் இனி கூடுதலாக 100 ரூபாய் கொடுக்க வேண்டும்.

இது குறித்து இந்திய கலாசாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘வெளிநாட்டினர் இனி நம் நாட்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் காண 1000 ரூபாய்க்கு பதிலாக 1,100 ரூபாய் கொடுக்க வேண்டும். அதேபோல, இந்திய குடிமக்கள் 50 ரூபாய் நுழைவுக் கட்டணம் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சார்க் நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், 540 ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

2016 ஆம் ஆண்டு, இதைப் போன்ற சிறப்பு இடங்களுக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தற்போது கட்டணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டணத் தொகை உயர்த்தப்படுவதால், இந்த இடங்களுக்கு வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement