This Article is From Jan 04, 2019

சுற்றுச்சசூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் வரக்கூடாது: கமல்ஹாசன்

சுற்றுச்சசூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் வரக்கூடாது என மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சசூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் வரக்கூடாது: கமல்ஹாசன்

முன்னதாக, கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது. புதைவட வழியாக மின்சாரம் கொண்டு செல்வது முடியாத காரியம், தொழில்நுட்ப வசதிகள் அந்தளவில் கண்டுபிடிக்கவில்லை. அரசியலுக்காக உயர்மின்கோபுரம் குறித்து விவசாயிகளிடம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுத்தால் தமிழகத்திற்கு போதுமான மின்சாரம் கிடைக்காமல் சென்று விடும்.

ஒவ்வொரு திட்டத்தையும் எதிர்த்து இப்படி போராடி கொண்டே இருந்தால் தமிழகத்திற்கு ஒரு திட்டமும் வராது, நஷ்டம் தான் ஏற்படும். இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் உண்மையான விவசாயிகளே இல்லை என்று அமைச்சர் தங்கமணி கூறியிருந்தார்.

விளைநிலங்களில் உயர்மின் அழுத்தம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், ஏராளமான பெண்கள் உட்பட சுமார் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், போராட்ட மக்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் நேரில் சென்று சந்தித்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பெரிய பெரிய தொழில்கள், ஆலைகள் வர வேண்டும். ஆனால், சுற்றுச்சசூழலுக்கு மாசு ஏற்படுத்தி அந்த சட்டங்களை எல்லாம் மீறும் தொழிற்சாலை வரக்கூடாது என்பது தான் எங்களின் கருத்தே தவிர தொழிற்சாலைகளே கூடாது என்பது இவர்கள் என்னமும் இல்லை, எங்கள் என்னமும் இல்லை.

விளைநிலங்களுக்கு இடையே கேபிள்களை கொண்டு செல்வது என்பது மிகவும் நியாயமான கோரிக்கை. தமிழகம் மட்டுமே அதை முதலில் செய்தது என்றால் அது தமிழகத்திற்கு பெருமை தான் என்று அவர் கூறினார்.
 

.