This Article is From May 11, 2020

டாஸ்மாக் திறப்பு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை: விசாரணை இல்லை!

டாஸ்மாக்கை திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. எனவே அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

டாஸ்மாக் திறப்பு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை: விசாரணை இல்லை!

டாஸ்மாக் திறப்பு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை: விசாரணை இல்லை!

மனுவில் பிழை இருந்ததால், டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ம்தேதியில் இருந்து அமலில் உள்ளது. இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு மே.7ம் தேதி முதல் மீண்டும் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர். 

மக்களின் அத்தியாவசிய தேவைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அத்தனையையும் தகர்த்து ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம்தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.

ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் ஆன்லைன் விற்பனை எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் படி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்றும் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை மேல்முறையீடு செய்தது.டாஸ்மாக்கை திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. எனவே அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மனுவில் பிழை இருந்ததால், டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை இருப்பதால் அதனை விசாரிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், மேல்முறையீட்டு மனுவில் இருக்கும் பிழை சரிசெய்யப்பட்ட பிறகு மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டால் செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

.