This Article is From Jul 30, 2018

போலிசாரை அலையவிட்ட வெள்ளைக் கங்காரு: நீச்சல் குளத்தில் குதித்த பின் பிடிபட்டது

தோட்டங்களுக்குள் புகுந்தோடி போலிசாரை அலையவிட்ட கங்காரு. அதிகாரி ஒருவரை முகத்தில் உதைக்கவும் முயற்சி

போலிசாரை அலையவிட்ட வெள்ளைக் கங்காரு: நீச்சல் குளத்தில் குதித்த பின் பிடிபட்டது

இறுதியில் நீச்சல் குளத்தில் குதித்தபோது போலிசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்

ஜெர்மனியின் டார்ட்மண்ட் பகுதியில் வெள்ளை நிற கங்காரு ஒன்று தறிகெட்டு ஓடுவதாகத் தகவல் கிடைத்ததால் போலிசார் அழைக்கப்பட்டனர். குடியிருப்புப் பகுதி முழுவதும் அதிகாரிகளை அலையவிட்ட கங்காரு, இறுதியாக வீட்டு நீச்சல்குளம் ஒன்றில் குதித்துப் பிடிபட்டது.

முன்னதாக, தனது அறைத்தோழரான ஆடு தன் தலையால் முட்டி தடுப்பை உடைத்ததால் எஜமானர் வீட்டிலிருந்து கங்காரு தப்பிச் சென்றது. பின்னர் தன்னைப் பிடிக்க வந்த போலிசாருக்குத் தண்ணி காட்டிய கங்காரு தோட்டங்களுள் புகுந்து ஓடியபடி இருந்தது. அதிகாரி ஒருவரை முகத்திலேயே உதைக்கவும் பார்த்தது. ஒருவழியாக நீச்சல் குளத்தில் குதித்தபோது போலிசார் அதனைப் பிடித்து உரிய இடத்திலேயே சேர்த்தனர்.

 
 

கடந்த வாரம் நடந்தேறிய இந்நிகழ்வின் படங்களைக் காவல்துறையினர் முகநூலில் பகிர்ந்தனர். நீச்சல் குளத்தில் குதிப்பதற்கு முன்பாக காரின் பின் கங்காரு ஒளிந்திருக்கும் படமும் இதில் அடக்கம். இப்பதிவை இணையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இரசித்தனர்.

 
 

நல்லவேளையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நீச்சல் குளத்துக்கு மட்டும் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கு முன் வாரம்தான் மெல்பர்னில் ஒருவரது தூங்கிக்கொண்டிருந்தபோது, ஜன்னலை உடைத்துக்கொண்டு ஒரு கங்காரு அறைக்குள் புகுந்து அட்டகாசம் செய்திருந்தது.

Click for more trending news


.