This Article is From Jun 12, 2020

இ.எஸ்.ஐ. ஊழல் வழக்கு! ஆந்திர முன்னாள் அமைச்சர் அச்சன் நாயுடு கைது - ஜெகன் அரசு அதிரடி!!

கடந்த 2014 முதல் 2019 வரையில் இ.எஸ்.ஐ.  நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் உள்ளிட்டவை குறித்து புகார் எழுந்ததை தொடர்ந்து, அதுதொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ரூ. 150 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்ததாக ஊழல் தடுப்பு பிரிவின் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இ.எஸ்.ஐ. ஊழல் வழக்கு! ஆந்திர முன்னாள் அமைச்சர் அச்சன் நாயுடு கைது - ஜெகன் அரசு அதிரடி!!

தெலுங்கு தேச கட்சி ஆட்சியின்போது, அச்சன் நாயுடு தொழிலாளர் நல அமைச்சராக பொறுப்பில் இருந்தார். 

ஹைலைட்ஸ்

  • ரூ. 150 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக அச்சன் நாயுடு மீது புகார்
  • அச்சன் நாயுட உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Amaravati:

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அச்சன் நாயுடு இ.எஸ்.ஐ. ஊழல் வழக்கில் கைது  செய்யப்பட்டுள்ளார்.  அவருடன் சேர்த்து மொத்தம் 6 பேரை கைது செய்து ஆந்திர ஊழல் தடுப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முந்தைய தெலுங்கு தேச கட்சியின் ஆட்சியின்போது இ.எஸ்.ஐ.  மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ரூ.  150 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. 

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் அச்சன் நாயுடு அவரது ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சொந்த வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரை தவிர்த்து இ.எஸ்.ஐ. நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சி. ரவிகுமார்,  ஜி. விஜயகுமார் ஆகியோர் திருப்பதி மற்றும் ராஜமகேந்திரவரம் ஆகிய இடங்களில் கைதாகினர். 

இந்த தகவலை விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஊழல் தடுப்பு பிரிவின் இணை இயக்குநர் ரவி குமார் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று இ.எஸ்.ஐ. நிறுவனத்தின் இணை இயக்குநர் ஜனார்தன், கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, மூத்த உதவியாளர் ஆகியோர் விஜயவாடாவில் கைது செய்யப்பட்டனர். 

முந்தைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சி ஆட்சியின்போது, அச்சன் நாயுடு தொழிலாளர் நல அமைச்சராக பொறுப்பில் இருந்தார். 

கடந்த 2014 முதல் 2019 வரையில் இ.எஸ்.ஐ.  நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் உள்ளிட்டவை குறித்து புகார் எழுந்ததை தொடர்ந்து, அதுதொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ரூ. 150 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்ததாக ஊழல் தடுப்பு பிரிவின் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மருத்துவ உபகரணங்கள், பர்னீச்சர் உள்ளிட்டவை வாங்கியதில் ஊழல் நடத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

முன்னதாக அச்சன் நாயுடு கைது செய்யப்பட்டபோது, அதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் மீது ஜெகன் மோகன் ரெட்டி அரசு தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.