This Article is From Mar 11, 2019

எத்தியோப்பியா விமான விபத்து: ஜெட், ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களிடம் விவரம் கேட்கும் மத்திய அரசு

விமான போக்குவரத்து இயக்குனரகம் ஜெட் மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்களிடம் விமானம் குறித்த விவரங்களை கேட்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பியா விமான விபத்து: ஜெட், ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களிடம் விவரம் கேட்கும் மத்திய அரசு

ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்கள் போயிங் 737 ரக விமானங்களை பயன்படுத்துகின்றன.

ஹைலைட்ஸ்

  • ஜெட் ஏர்வேஸ்,ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் போயிங் விமானத்தை பயன்படுத்துகின்றன
  • விமானங்களின் நிலை குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்கவுள்ளது
  • இந்தியர்கள் 4 பேர் உள்பட 157 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்
New Delhi:

எத்தியோப்பியா விமான விபத்தின் எதிரொலியாக போயிங் ரக விமானங்களை பயன்படுத்தும் ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களிடம் விமானத்தின் நிலை குறித்து மத்திய அரசு விவரங்களை கேட்கவுள்ளது.

எத்தியோப்பியாவில் நடந்திருக்கும் விமான விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் இந்தியர்கள் ஆவர். தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்ட விமானம் 6 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையின் இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.

விபத்து நேர்ந்ததற்கான காரணங்கள் குறித்து உடனடியாக விவரங்கள் வெளியாகவில்லை. தொழில்நுட்ப கோளாறுதான் இதற்கான முக்கிய காரணமாக இருக்கும் என தெரிகிறது. இந்த சம்பவத்தில் போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அதே ரகத்தை சேர்ந்த விமானங்கள் இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை பயன்படுத்துகின்றன. இந்த நிலையில் எத்தியோப்பியா விமான விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் இயங்கும் போயிங் விமானங்களின் நிலை குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ விவரங்களை கேட்கவுள்ளது.

 

மேலும் படிக்க - "எத்தியோப்பியா விமான விபத்தில் இந்தியர்கள் 4 பேர் உயிரிழப்பு"

.