This Article is From Oct 30, 2019

'இந்தியாவில் தீவிரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு தரப்படும்' - ஐரோப்பிய பிரதிநிதிகள் உறுதி!!

ஐரோப்பிய நாடுகளின் எம்.பி.க்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஜம்மு காஷ்மீருக்கு சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர் மத்திய அரசை விமர்சித்துள்ளனர்.

ஸ்ரீநகரில் டால் ஏரியில் ஐரோப்பிய பிரதிநிதிகள் படகு சவாரி செய்தனர்.

Srinagar:

இந்தியாவில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு தரப்படும் என்று ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு செல்ல அவர்கள் விருந்தினராக சென்ற நிலையில், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தியர்கள் காஷ்மீருக்கு செல்ல முடியாத அளவுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது என்றம், ஐரோப்பிய பிரதிநிதிகள் அங்கு சென்றிருப்பது இந்திய ஜனநாயகத்தை அவதிக்கும் செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இந்த நிலையில் ஐரோப்பிய பிரதிநிதிகள் ஸ்ரீநகரின் டால் ஏரியில் படகு சவாரி செய்தனர். பின்னர் அவர்கள் அளித்த பேட்டியில் இந்தியாவில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று தெரிவித்தனர். இந்த செய்தி தொடர்பான முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

1. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக வெளிநாடுகளின் பிரதிநிதிகள் காஷ்மீருக்கு சென்றுள்ளனர். இது பல்வேறு சர்ச்சைகளை தேசிய அளவில் ஏற்படுத்தியுள்ளது. 

2. காஷ்மீர் பயணத்திற்கு பின்னர் பேட்டியளித்த எம்பிக்கள் 'நாங்கள் சர்வதேச பிரதிநிதிகள்.  இந்தியாவில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு முழு அமைதி நிலை நாட்டப்படும் வரையில் நாங்கள் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிபோம் ' என்று தெரிவித்தனர். 

3. 'எங்களை சந்தித்த காஷ்மீர் மக்கள், தாங்களும் இந்தியர்கள்தான். இந்தியாவின் மற்ற இடங்களில் வளர்ச்சி ஏற்படுவதைப் போல இங்கும் ஏற்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்தனர்' என பிரதிநிதிகளில் ஒருவர் தெரிவித்தார்.

4. பாதுகாப்பு காரணங்களுக்காக குண்டுகள் துளைக்காத காரில் ஐரோப்பிய எம்பிக்கள் காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீநகரில் அவர்கள் தங்கும் ஓட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

5. வந்திருந்த 27 ஐரோப்பிய எம்.பி.க்களில் 3 பேர் மட்டுமே இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வலதுசாரி கட்சியின் எம்.பி.க்கள். அனைத்து எம்.பி.க்களும் தங்களது சொந்த செலவில் இந்தியா வந்துள்ளனர். 

6. எம்.பி.க்களை பாரம்பரிய முறைப்படி வரவேற்ற காஷ்மீர் மாநில நிர்வாகம், அவர்களுக்கு மாநிலத்தின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தது. 

.