Read in English
This Article is From Aug 23, 2018

கேரளாவுக்கு ரெட் கிராஸ் மூலம் 190,000 யூரோக்கள் நிதி உதவி அளிக்கிறது ஐரோப்பிய யூனியன்

ஐரோப்பிய யூனியனின் இந்த நிதி கொண்டு, தங்கள் வாழ்விடத்தை சீரமைக்கத் தேவையான தார்பாய், சமையல் பாத்திரங்கள் போன்ற பொருட்கள் வழங்கப்படும்

Advertisement
இந்தியா
New Delhi:

கேரளா மாநிலம் வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள உதவும் வகையில், ஐரோப்பிய யூனியன், இந்திய ரெட் கிராஸ் அமைப்புக்கு 190,000 யூரோக்கள் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் இந்த உடனடி நிதி உதவி வழங்குவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. இந்த நிதி, வெள்ளத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட 25,000 பேருக்கு சென்று சேரும் என்றும் கூறியுள்ளது.

1924-க்கு பிறகு மிகப் பெரும் மழை வெள்ளத்தை சந்திக்கும் கேரளாவில் இதுவரை 370 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியனின் இந்த நிதி கொண்டு, தங்கள் வாழ்விடத்தை சீரமைக்கத் தேவையான தார்பாய், சமையல் பாத்திரங்கள் போன்ற பொருட்கள் வழங்கப்படும். மேலும், டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவு வாய்ப்பிருப்பதால், கொசு வளைகளும் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதே நேரம், நோய் தடுப்பு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Advertisement

இந்த நிதி, சர்வதேச ரெட் கிராஸ் அமைப்பின், அவசர கால பேரிடர் நிதியில் இருந்து கொடுக்கப்படுவதாகவும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

Advertisement