New Delhi/Chandigarh: புது டெல்லி: யமுனை நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதி மக்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
இமாச்சல பிரதேசம், உத்ரகாண்ட் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. ஹரியானா மாநிலம் ஹத்னி குந்த் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதால், யமுனை ஆற்றின் அளவு உயர்ந்துள்ளது. அபாய அளவு 205.06 மீட்டர்களுக்கு அதிகமாக, நீர் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதனால், யமுனை நதியோரம் உள்ள பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இன்றிரவு, நதியின் நீர் அளவு உயர வாய்ப்புள்ளதால், அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹரியானா மாநிலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.