This Article is From Jul 03, 2019

மெஸ்ஸியே தோற்றுவிடுவார், கால்பந்து திறனால் ட்விட்டரை கலக்கும் 'மாடு'!

சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள், "மெஸ்ஸி, ரொனால்டோ கூட இந்த மாட்டிடமிருந்து கால்பந்தை கைப்பற்றுவது கடினம்" என பதிவு.

மெஸ்ஸியே தோற்றுவிடுவார், கால்பந்து திறனால் ட்விட்டரை கலக்கும் 'மாடு'!

கால்பந்தை வைத்துக்கொண்டு டிவிட்டரை கலக்கிக்கொண்டிருக்கும் மாடு

New Delhi:

கால்பந்து உலகின் ஜாம்பவான்கள் என்றால் முதலில் மனதிற்கு வருவது லியோனல் மெஸ்ஸி மற்றும் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரும்தான். ஆனால், அந்த இருவருமே கோவாவில் உள்ள இந்த கால்பந்து ஆட்டக்காரரை பார்த்தால், அவருடன் விளையாட சற்றே அச்சப்படுவார்கள். மெஸ்ஸி, ரொனால்டோவே அச்சப்படும் அளவிற்கு விளையாடக்கூடிய வீரர் யார்?

இந்த களிமண் களத்தில் கால்பந்தை வைத்து நின்றுகொண்டிருக்கும் மாடுதான் அந்த ரொனால்டோ, மெஸ்ஸி ஆவர்களே கண்கு அஞ்சக்கூடிய வீரர். கோவாவில் உள்ள ஒரு மைதானத்தில் சில இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, அந்த பந்து ஒரு மாட்டின் அருகே செல்கிறது. அதனை எடுக்க, அங்கு கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த ஒருவர் அந்த மாட்டின் அருகில் செல்கிறார். முதலில் ஆக்ரோசம் காட்டிய மாடு, பின் அந்த பந்தை தன் கால்களால் உதைக்கிறது. கால்களால் உதைத்தபடி, அந்த பந்தை தன்னுடனே எடுத்து செல்கிறது அந்த மாடு. அவர், அந்த பந்தை எடுக்க தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆனால், அந்த மாடோ பந்தை திரும்பத்தரும் மனநிலையில் இல்லை. அந்த பந்தை உதைத்தபடியே நகர்கிறது. 

ஒரு கட்டத்தில், அவர் அந்த மாட்டின் அருகில் நெருங்கி செல்கையில், அந்த மாடு பந்தை விட்ட சற்று விலகி இவரை நோக்கி வருகிறது. அந்த நேரத்தில், அங்கிருந்த மற்றோருவர் அந்த பந்தை உதைக்கிறார். ஆனால், அந்த மாடு அன்று கால்பந்து விளையாடும் மனநிலையில் இருந்திருக்கும் போல. அந்த கால்பந்தை விரட்டி செல்கிறது. மற்றோருவர் மீண்டும் அந்த பந்தை உதைக்கிறார், மீண்டும் அந்த பந்து திசை மாறுகிறது. மீண்டும் அந்த மாடு பந்தை நோக்கி செல்கிறது. எப்படி கால்பந்து போட்டியில் தன் பக்கத்தில் பந்து வந்தால் டிபண்டர்கள் அதை ஒருவர் மாற்றி அடித்துக்கொள்வார்களோ அவ்வாறு, இவர்கள் பந்தை மாற்றிக்கொண்டிருந்தார்கள். அந்த மாடும் எப்படி எதிரணியின் அட்டாக்கர்கள், இந்த பந்தை கைப்பற்ற பந்தில்பின் ஓடுவார்களோ அவ்வாறு பந்தை பின் தொடர்ந்தது.

அந்த காணோளி இதோ!

இந்த வீடியோ முதலில் சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட பின் வைரலாகிக்கொண்டுள்ளது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்,"மெஸ்ஸி, ரொனால்டோ கூட இந்த மாட்டிடமிருந்து கால்பந்தை கைப்பற்றுவது கடினம்" என கேலி செய்துள்ளனர். 

கிரிக்கெட் வருணனையாளரான ஹர்ஷா போக்லேவும் இந்த வீடியோவை டிவிட்டரில் பதிவேற்றி, 'இன்றைய நாளில் நீங்கள் காணும் வேடிக்கையான விஷயம்' என குறிப்பிட்டுள்ளார்.

Click for more trending news


.