This Article is From Nov 29, 2018

இந்தியா - பாகிஸ்தான் காரிடார்: மோடி சொன்ன பெர்லின் சுவர் உதாரணம்!

மத்திய அமைச்சரவை கார்டர்பூர் ஷாஹிப் காரிடார் குறித்த தகவல்களைப் பகிர்ந்த அடுத்த நாளே, பிரதமரும் அது குறித்து பேசியுள்ளார்.

கார்டர்பூர் ஷாஹிப் காரிடார் குறித்து, டெல்லியில் நடைபெற்ற குருபூரப் நிகழ்ச்சியில் மோடி பேசியுள்ளார்.

New Delhi:

மத்திய அமைச்சரவை கார்டர்பூர் ஷாஹிப் காரிடார் குறித்த தகவல்களைப் பகிர்ந்த அடுத்த நாளே, பிரதமரும் அது குறித்து பேசியுள்ளார். இந்தப் பேச்சு வைரலாகியுள்ளது. பிரதமர் இந்த காரிடாரை, பெர்லின் சுவருடன் ஒப்பிட்டுள்ளார். 1989ம் ஆண்டு கிழக்கு மற்றும் தெற்கு ஜெர்மனியை பிரிக்கும் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. "சுவர் தகர்க்கப்படலாம். ஆனால் கார்டர்பூர் காரிடார் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இணைப்பாக இருக்கும்". 

"யாராவது நினைத்திருப்பார்களா பெர்லின் சுவர் விழும்" என்று கூறிய மோடி "குருநானக் தேவ்வின் ஆசிர்வாதத்தால் இந்த காரிடார் வெறும் சாலையாக மட்டுமில்லாமல் இரு நாடுகளை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்" என்று கூறினார். இதனை டெல்லியில் நடைபெற்ற குருபூரப் நிகழ்ச்சியில் மோடி பேசினார். 

பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் அமைந்திருக்கும் கார்டர்பூர் ஷாஹிப் பகுதியில் தான் குருநானக் தனது கடைசி 18 ஆண்டுகளை கழித்துள்ளார். டேரா பாபா நானக் பகுதியிருந்து சர்வதேச எல்லையை கட்டமைக்க மத்திய அமைச்சரவை வியாழனன்று இந்த காரிடார் மேம்பாட்டுக்கு அனுமதி வழங்கியது. 

பாகிஸ்தான் அரசு குருநானக்கின் 550வது பிறந்தநாளில் 2019ம் ஆண்டு இதனை திறக்க சம்மதித்துள்ளது. 

மேலும் பிரதமர் மோடி '' நான் முதல்வராக இருந்தபோது குருநானக் வாழ்ந்த இடமான படுக்கோன்னை மறு சீரமைக்க கோரினேன். அது பூகம்பத்தில் சேதமடைந்தது. தற்போது உலக புராதான சின்னமாக மாறியுள்ளது. இந்த காரிடாரும் இருநாட்டு மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக அமையும்" என்று கூறினார். 

.