This Article is From Oct 19, 2018

2022-க்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு – பிரதமர் மோடி உறுதி

மகாராஷ்டிராவில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது மத்திய அரசின் சாதனைகளை மோடி எடுத்துக்கூறினார்

2022-க்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு – பிரதமர் மோடி உறுதி

அரசியல் காரணங்களால் பிரிவினை உண்டாக்கும் சக்திகளை வீழ்த்த வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்

Shirdi:

மகாராஷ்டிர மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கு நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்பின்னர் சாய்பாபா பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளிக் காசுகளை மோடி வெளியிட்டார்.

இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது-

கடந்த 4 ஆண்டுகளாக நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். முந்தைய அரசுகள் தங்களது குடும்பத்தின் பெயரை நிலை நாட்டுவதற்கு மட்டுமே முயற்சி எடுத்தன. ஏழைகள் வாழ்வில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியின் இலக்கு என்பது வாக்கு வங்கிகளை உருவாக்குவதுதான்.

2022-க்குள் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் வீடு கிடைக்க வேண்டும். அந்த ஆண்டில் நாடு விடுதலை பெற்று 75-வது ஆண்டை கொண்டாடும். அந்த நேரத்தில் அனைவருக்கும் வீடு திட்டம் முழுமை பெறும்.

முந்தைய அரசுகள் எல்லாம் மொத்தமே 25 லட்சம் வீடுகளைத்தான் கட்டிக் கொடுத்தன. ஆனால் 4 ஆண்டுகளாக எங்களது அரசு 1.25 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்திருந்தால் இந்த வீடுகளை கட்டி முடிப்பதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகியிருக்கும். இவ்வாறு மோடி பேசினார்.

.