This Article is From Jan 10, 2020

“ஒவ்வொருவரும் அம்பேத்கராக மாற வேண்டும்”- துரைமுருகன் உருக்கமான பேச்சு!

Durai Murugan - "இந்த நாட்டின் வளர்ச்சியில் ஆங்கிலோ இந்தியர்களின் பங்களிப்பும் இருக்கிறது."

Advertisement
தமிழ்நாடு Written by

Durai Murugan - "அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்."

Durai Murugan - இந்த ஆண்டிற்கான முதலாவது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெற்றன. இதில் குறிப்பிடத்தகும்படி சட்டசபை எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் துரைமுருகன், “ஒவ்வொருவரும் அம்பேத்கராக மாற வேண்டும். அப்போதுதான் சட்ட சாசன உரிமைகளைப் பாதுகாக்க முடியும்,” எனப் பேசியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் உள்ளிட்டவர்களுக்கு ‘பிரதிநிதித்துவ முறைப்படி' ஒரு குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு 10 ஆண்டிற்கும் இது குறித்து மறு பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும். அதைப் போன்ற மறு பரிசீலனை முடிவில் ஆங்கிலோ இந்தியர்களுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவது புதுப்பிக்கப்படவில்லை.

இந்த முடிவை எதிர்த்து துரைமுருகன் சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில், “இந்த நாட்டில் அனைவரின் குரல்களும் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் பிரதிநிதித்துவ முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை போக்கும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் குரல் கொடுக்க வேண்டும்.

Advertisement

இந்த நாட்டின் வளர்ச்சியில் ஆங்கிலோ இந்தியர்களின் பங்களிப்பும் இருக்கிறது. அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் அம்பேத்கராக மாறி சிந்தித்தால்தான், நம்மால் சட்டசாசன உரிமைகளைப் பாதுகாக்க முடியும்,” என உருக்கமாக பேசினார். 
 

Advertisement