“Flip The Switch” எனப்படும் அந்த சேலஞ்சில் பல்வேறு டிக்டாக் பயனர்கள் மட்டுமின்றி, சில உள்ளூர் மற்றும் சர்வதேச பிரபலங்களும் பங்கேற்று கலக்கி வருகின்றனர்.
டிக்டாக் தளத்தில் சமீபத்திய சேலஞ்ச் ஒன்று உலக அளவில் வைரலாகியுள்ளது. “Flip The Switch” எனப்படும் அந்த சேலஞ்சில் பல்வேறு டிக்டாக் பயனர்கள் மட்டுமின்றி, சில உள்ளூர் மற்றும் சர்வதேச பிரபலங்களும் பங்கேற்று கலக்கி வருகின்றனர்.
இந்த சேலஞ்சில் ராப்பர் டிரேக்கின் ‘நான்ஸ்டாப்' பாடலுக்கு ஒருவர் நடனமாட, அதை இன்னொருவர் வீடியோ எடுக்கிறார். பின்னர் வீடியோ எடுத்தவர் நடனமாட, நடனமாடியவர் வீடியோ எடுக்கிறார். இப்படி இடங்கள் மட்டும் மாறுவதில்லை, இருவரின் உடைகளும் பரஸ்பரம் மாற்றிக் கொள்ளப்படுகிறது. வேடிக்கையாகவும் வித்தியாசமாகவும் இருப்பதனால் இந்த சேலஞ்ச், பலரை ஈர்த்துள்ளது. தற்போது பலரும் இதை முயற்சி செய்து டிக்டாக் தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதில் அமெரிக்காவின் செனட்டர் எலிசபத் வாரன் செய்த “Flip The Switch” சேலஞ்ச் படுவைரலாக மாறியுள்ளது. இதுவரை அவரின் வீடியோவை 2.2 கோடி முறை பார்த்துள்ளனர்.
அதேபோல பிரபல பாடகியும் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸ், தனது பார்ட்னர் அலெக்ஸ் ரோட்ரிகஸுடன் இந்த “Flip The Switch” சேலஞ்சில் பங்கேற்று அசத்தியுள்ளர். அவரின் வீடியோ, 4.2 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.
பிரபல மாடல் எமிலி ராடாகோவ்ஸ்கியின் வீடியோவும் டிக்டாக் வைரலாக மாறியுள்ளது.
நடிகை சமீரா ரெட்டியும் இந்த சேலஞ்சில் பங்கேற்றார். அவர் தனது மாமியாருடன் இந்த சேலஞ்சில் பங்கேற்று பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளார்.
“Flip The Switch” என்னும் இந்த சேலஞ்ச் மட்டுமல்ல டிக்டாக் தளத்தில் தொடர்ந்து பல்வேறு சேலஞ்சுகள் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் ‘Hand Emoji' என்னும் சேலஞ்ச் டிக்டாக்கில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Click for more
trending news