This Article is From Feb 01, 2019

''மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யவே முடியாது''- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

மக்களவை தேர்தலுக்கு முன்பாக கண்காணிப்பு ஆப் லான்ச் செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

''மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யவே முடியாது''- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் எந்திரம் உபயோகிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Ranchi:

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில்  மோசடி செய்யவே முடியாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில்  அரோரா செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது-

நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யவே முடியாது. அதனை எந்தவொரு கட்சிக்கும் சாதகமாக  பயன்படுத்த முடியாது.

இந்த பிரச்னை குறித்து கூட்டம் நடத்தினோம். அதில் எந்தக் கட்சிகளும் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறவில்லை.  கடந்த 20  ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.

.