உயர்ந்து வரும் பஞ்சு விலையிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அச்சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பஞ்சு விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வினால் பன்னாட்டு நிறுவனங்களும் வியாபாரிகளும் லாபம் அடைவர். இதனால் பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இருக்காது. விவசாயிகளிடமிருந்து பெரிய நிறுவனங்கள், பருத்தியை அடிப்படை விலைக்கு வாங்கி, அதை மற்ற சிறிய நிறுவனங்களிடம் பன்மடங்கு விலையேற்றி விற்றுவிடும்’ என்றும்,
‘சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் முன்னரே பஞ்சை வாங்கி வைக்கும் அளவுக்கு வசதி இருக்காது. எனவே பஞ்சு விலையேற்றத்தை சமாளிக்க அரசு, இருப்பு வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் சிறிய நிறுவனங்களைக் காத்திட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)