Read in English
This Article is From Jul 24, 2019

''பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்'' - ஸ்டாலின் வலியுறுத்தல்!!

வங்கி தேர்வுகளில் பொருளாதார அடிப்படையினலான இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.

Advertisement
இந்தியா Edited by

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன.

Chennai:

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார். வங்கி தேர்வுகளில் பொருளாதார அடிப்படையினலான இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. 

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) -ல் காலியாக உள்ள 8,653  இடங்களை நிரப்ப முதல்கட்ட தேர்வு நடத்தப்பட்டது. லட்சக்கணக்கானோர் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனை கண்டித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், 'ஸ்டேட் வங்கித் தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என Cut-Off எடுக்க வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம். பாஜக அரசு சமூகநீதியை படுகுழியில் தள்ளியிருக்கிறது.#10percentreservation ஐ உடனடியாக ரத்து செய்க!' என்று குறிப்பிட்டுள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement