This Article is From Aug 09, 2019

உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி!!

Arun Jaitley: சிறுநீரக கோளாறு பிரச்னையால் அருண் ஜெட்லி அவதிப்பட்டு வந்திருந்தார். இதுதொடர்பாக அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி!!

Arun Jaitley: கடந்த சில மாதங்களாக அருண் ஜெட்லியின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி (Arun Jaitley) உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருறது. மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிறுநீரக கோளாறு பிரச்னையால் அருண் ஜெட்லி (Arun Jaitley) அவதிப்பட்டு வந்திருந்தார். இதுதொடர்பாக அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். கடந்த சில மாதங்களாக அருண் ஜெட்லியின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

2014 -2019 வரை மோடி அரசு ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்புத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் பொறுப்பில் ஜெட்லி இருந்தார். அனுபவம் வாய்ந்த அவருக்கு மோடி அரசு இரண்டாவது முறையாக பதவிக்கு வந்தபோது அமைச்சர் பதவி அளிக்க முடிவு செய்திருந்தது. ஆனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் பொறுப்பை அருண் ஜெட்லி தவிர்த்தார். 

நிதியமைச்சராக அருண் ஜெட்லி இருந்தபோது,கடந்த ஆண்டு ஏப்ரலில் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த ஆண்டு மே மாதத்தில் அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் - ஆகஸ்ட் 23-ம்தேதி வரையில் அவருக்கு சிகிச்சை நடைபெற்றது. இதன்பின்னர் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். நீண்ட நாட்களாக சர்க்கரை நோய் இருந்ததால் அவரது உடல் எடை கடுமையாக அதிகரித்தது. இதனை குறைப்பதற்காக 2014 செப்டம்பரில் ஜெட்லி அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டார். 
 

.