This Article is From Apr 11, 2019

மோடியை எதிர்த்து போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி சிஎஸ் கர்ணன்

கர்ணன் அவர்கள் தனது அறிக்கையை 2018 ல் ஊழல் தடுப்பு டைனமிக் கட்சியின் வேட்பாளராக தாக்கல் செய்தார்.

மோடியை எதிர்த்து போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி சிஎஸ் கர்ணன்

திரு. கர்ணன் நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டிக்கப்பட்ட முதல் நீதிபதி ஆவார்.

Chennai:

சென்னை மற்றும் கொல்கத்தாவின் உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற  நீதிபதி சிஎஸ் கர்ணன் மோடிக்கு எதிராக  வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளார். 

இது குறித்து ஐஏஎன்எஸ் வெளியிட்ட செய்தியில், “ வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன். வாரணாசி தொகுதியில் போட்டியிட எனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய தயாராக உள்ளேன்” என்று கூறியிருந்தார். இவர் ஏற்கனவே சென்னை லோக்சபா தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வாரணாசியில் இரண்டாவது தொகுதியாக போட்டியிட உள்ளார்.

கர்ணன்  2018ல் ஊழல் தடுப்பு டைனமிக் கட்சியின் வேட்பாளராக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கர்ணன் நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டிக்கப்பட்ட முதல் நீதிபதி ஆவார். ஓய்வு பெற்ற பின்னர் 2017-ம் ஆண்டில்  6 மாத சிறைத் தண்டனை பெற்று சிறை சென்றார். 

.