This Article is From Aug 02, 2019

கப்பலில் சிறை வைக்கப்பட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்! இந்திய அதிகாரிகள் விசாரணை!!

உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்ததால் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கபூர் கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

கப்பலில் சிறை வைக்கப்பட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்! இந்திய அதிகாரிகள் விசாரணை!!

அப்துல் கபூர் விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

Tuticorin, Tamil Nadu:

உரிய ஆவணங்கள் இன்றி தூத்துக்குடி கடல் பகுதிக்கு வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கபூர் கப்பலிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சட்டவிரோதமாக அவர் இந்திய கடல் எல்லைக்குள் வந்ததால் அவரை கப்பலிலேயே அதிகாரிகள் சிறை வைத்துள்ளனர். மாலத்தீவு துணை அதிபராக அகமது அதீப் கடந்த 2015-ல் பொறுப்பில் இருந்தார். 

அப்போது அந்நாட்டின் அதிபர் அப்துல்லா யாமீனை கொல்வதற்கு முயற்சிகள் நடந்தன. இதில் யாமீன் தப்பித்தாலும், அவரது குடும்பத்தினர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் அகமது அதீப்புக்கும் தொடர்பு இருந்ததாக கூறி அவர் கைதும் செய்யப்பட்டார். அதிபர் கொலை முயற்சி வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அகமது அதீப் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் அவர் சட்டவிரோதமாக விர்கோ - 9 என்ற இழுவைக் கப்பலில் தூத்துக்குடி கடல் பகுதிக்கு வந்தார். அவருடன் 9 பேர் இருந்தனர். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் இந்திய அதிகாரிகள் கப்பலிலேயே சிறைப்பிடித்துள்ளனர். 

இது சர்வதேச விவகாரம் என்பதால் இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 'இந்தியாவுக்கு வருவதென்றால் குறிப்பிட்ட இடங்கள் இருக்கின்றன. அங்கு அவர் வரவில்லை. அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அவருக்கு இந்தியா வருவதற்கே அனுமதி அளிக்கப்படவில்லை' என்று வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறியுள்ளார். 
 

.