This Article is From Aug 04, 2019

தூத்துக்குடி வந்த மாலத்தீவு துணை அதிபர் கைது! சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்!!

ஒருவாரம் நீடித்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி தமிழ்நாட்டுக்கு புகலிடம் தேடி மாலத்தீவு துணை அதிபர் அதீப் அப்துல் கபூர் வந்தார். அவரிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி வந்த மாலத்தீவு துணை அதிபர் கைது! சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்!!

முன்னாள் அதிபர் கொலை முயற்சியில் அப்துல் கபூருக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

Male, Maldives:

சட்ட விரோதமாக தூத்துக்குடி வந்த மாலத்தீவு முன்னாள் தணை அதிபர் அகமது அதீப் அப்துல் கபூரை மாலத்தீவு அதிகாரிகள் கைது செய்து சொந்த நாட்டுக்கு கொன்று சென்றனர்.

மாலத்தீவில் வீட்டுச் சிறையில் இருந்து வரும், முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கபூர், அங்கு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி இந்தியாவில் அரசியல் தஞ்சம் கோர திட்டமிட்டிருந்தார்.

முறையான ஆவணங்கள் அடிப்படையில் வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், அவரிடம் எந்த முறையான ஆவணங்களும் இல்லை. இதனால், அவர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

 நடுக்கடலில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர், இந்தியாவில் கால் வைக்க அனுமதிக்கப்படவில்ல. இதை தொடர்ந்து தடுப்பு காவலில் அவரை பிடித்து வைத்திருந்த இந்திய கடற்படையினர் மற்றும் உளவுத்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

37 வயதான அவர் 2015-ம் ஆண்டு அந்நாட்டு அதிபரை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் 33 ஆண்டுகள் தண்டனை பெற்றவர் ஆவார். மேல்முறையீடு செய்த அவருக்கு தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் மே தின விழாவில் துப்பாக்கியுடன் நுழைந்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கு பயந்து அகமது அதீப் அப்துல் கபூர் கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அகமது அதீப் ஏற்கனவே, சுற்றுலாத்துறை அமைச்சராகவும், பொருளாதாரக் குழுவின் தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் இந்தியா வந்த மாலத்தீவு அதிகாரிகள் அகமது அதீப் அப்துல் கபூரை கைது செய்து மாலத்தீவுக்கு கொண்டு சென்றனர்.

.