This Article is From Oct 09, 2018

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து: இலங்கை முன்னாள் அமைச்சர் கைது!

இலங்கையின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து: இலங்கை முன்னாள் அமைச்சர் கைது!

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கையின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை மாதம் பெண்கள் நலத் துறை துணை அமைச்சராக இருந்த போது விஜயகலா, ‘மே18, 2009-க்கு முன்னர் நமது வாழ்க்கை குறித்து யோசித்துப் பார்க்கும் போது, விடுதலை புலிகளுக்குக் கீழ் பாதுகாப்பாக இருந்தோம். விடுதலை புலிகள் மீண்டும் வர வேண்டும் என்பதைத் தான் தற்போது இலங்கையில் நிகழும் சூழ்நிலை நமக்கு உணர்த்துகிறது. நமது குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாக வாழ, விடுதலை புலிகளின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்’ என்று பேசி பரபரப்பைக் கிளப்பினார்.

இதையடுத்து, இலங்கையின் சிங்கள ஆதரவு அரசியல்வாதிகள், விஜயகலாவை, பதவியிலிருந்து நீக்குமாறு கூறி வந்தனர். இதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் இந்த விவகாரம் குறித்து நாட்டின் அட்டர்னி ஜென்ரலிடம் மேற்பார்வையிடுமாறு தெரிவித்தது. மேலும், காவல் துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

விஜயகலா, தான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக போலீஸிடம் ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.