Read in English
This Article is From Dec 02, 2019

முன்னாள் மத்திய அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!!

பாஜகவை சேர்ந்த ஷோரி, மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர். மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 1999-2004-ல் பொறுப்பில் இருந்தது. அப்போது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக அருண் ஷோரி இருந்தார்.

Advertisement
இந்தியா Edited by

தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆங்கில நாளிதழின் ஆசிரியராகவும் அருண் ஷோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Pune:

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

78 வயதாகும் அருண் ஷோரிக்கு நேற்று மயக்கம் காரணமாக தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடல்நலம் பாதிப்பு அடைந்த அவரை உறவினர்கள் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது அவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மயக்க  நிலையில் இன்னும் அவர் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜகவை சேர்ந்த ஷோரி, மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர். மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 1999-2004-ல் பொறுப்பில் இருந்தது. அப்போது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக அருண் ஷோரி இருந்தார்.

Advertisement

மிகச் சிறந்த எழுத்தாளரான அவர், 1967-1978 களில் பொருளாதார வல்லுனராக உலக வங்கிக்கு பணியாற்றியவர்.

தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆங்கில நாளிதழின் ஆசிரியராகவும் அருண் ஷோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.  

Advertisement
Advertisement