This Article is From Apr 20, 2020

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு கட்டாயம் நடைபெறும்: அமைச்சர் கறார்!

முன்னதாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன. இறுதி தேர்வில் பல மாணவர்கள் பங்கேற்காத சூழ்நிலையில், விடுபட்ட மாணவர்களுக்கு வேறு ஒரு தேதியில் தேர்வு வைக்கப்பட்டும் என அரசு அறிவித்திருந்தது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு கட்டாயம் நடைபெறும்: அமைச்சர் கறார்!

தமிழகத்தில் மே 3 வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என மாநில அரசு அறிவித்திருக்கக்கூடிய நிலையில், 10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளுக்கான அட்டவணை மே 3-ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கட்ட மாதம் 27 தேதி முதல் தொடங்க இருந்த பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, தேசிய அளவில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையான முழு முடக்க(LOCKDOWN) உத்தரவு காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு 9-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி தேர்ச்சி நடைமுறை அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்திருந்தது.

முன்னதாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன. இறுதி தேர்வில் பல மாணவர்கள் பங்கேற்காத சூழ்நிலையில், விடுபட்ட மாணவர்களுக்கு வேறு ஒரு தேதியில் தேர்வு வைக்கப்பட்டும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும், அதற்கான அட்டவணை மே 3க்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். 

.