புதுவை பல்கலைக் கழகத்தில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
New Delhi: வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நாகை, காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 6 மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்ததேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என புதுவை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இதேபோன்று புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சென்டர்கள் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம், அந்தமான் நிகோபர் ஆகிய இடங்களிலும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
| ReplyForward |
இதற்கிடையே, காரைக்காலை புயல் தாக்கினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். நிவாரணப் பொருட்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு புதுவை முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டுள்ளார்.