This Article is From Oct 01, 2018

ஐ.ஐ.டி. மெட்ராஸில் Executive MBA படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

மேலாண்மை படிப்புகள் துறை சார்பாக Executive MBA பட்டப்படிப்பு நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் இந்த படிப்பு கற்றுத் தரப்படுகிறது.

ஐ.ஐ.டி. மெட்ராஸில் Executive MBA  படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

பணி செய்து கொண்டே படிக்கும் வகையில் இந்த பட்டப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Chennai:

இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ், Executive MBA என்ற பட்டப்படிப்பை 2018-ல் தொடங்கியுள்ளது. மேலாண்மை படிப்புகள் துறை சார்பாக இந்த கோர்ஸ் கற்றுத் தரப்படுகிறது. இதனால் மேலாண்மை பிரிவில் பணியில் இருக்கும் இளம் மற்றும் நடுத்தர பணியாளர்கள் மிகுந்த பலனை பெறுவார்கள்.

இந்த படிப்புக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 30-ம்தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகறிது. இந்த கோர்ஸை ஐஐடி மெட்ராஸ் நடப்பாண்டில் தொடக்கி முதல் பேட்ச் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2-வது பேட்சுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மாதத்தில் 2 வாரங்கள் இறுதியில் இந்த படிப்புகள் கற்றுத் தரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக மேலாண்மை துறை நல்ல வளர்ச்சியில் உள்ளது. வருங்கால சவால்களை சமாளிக்கும் வகையில் புதிய பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. மேலாண்மை கல்வி கற்றுத் தருவதில் 50 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தது மெட்ராஸ் ஐஐடி நிறுவனம். இந்த புதிய Executive MBA படிப்பதன் மூலம் மேலாண்மை துறையில் முன்னணியில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

.