2019 Poll of Exit Poll India: 7கட்டமாக நடந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
New Delhi: நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த மாதம் முதல் நடந்த வந்த மக்களவை தேர்தல், இறுதி கட்டத்தை எட்டியது. இன்று நடந்த 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
கடந்த ஏப்.11ஆம் தேதி தொடங்கிய தேர்தலில், 6 கட்டமாக இதுவரை 483 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 59 தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இந்த தேர்தல் நடைபெற்றது. பீகாரில் 8, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 உள்ளிட்ட தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த 59 தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 918 வேட்பாளர்கள் இறுதிக்கட்டத் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு அப்டேட்ஸ்
பாஜக எளிதாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தகவல்.
EXIT POLLS 2019: பஞ்சாப்பில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும்.
கேரளாவில் காங்கிரஸ் 13 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும் என்று கணிப்பு.
Poll of Exit Polls: ஒடிசாவில் பாஜகவுக்கும் பிஜூ ஜனதா தளத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கணிப்பு. மேற்குவங்கத்தில் கடந்த 2014 தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, இந்த தேர்தலில் 14 இடங்களில் வெற்றி பெறும் என கணிப்பு
மகாராஷ்டிராவில் பாஜக + சிவசேனா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிப்பு..
உத்தரபிரதேசத்தில் பாஜக 46 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் + சமாஜ்வாதி கூட்டணி 32 தொகுதிகளில் வெற்றி பெறும்..
தேர்தலுக்கு பிந்தை கருத்துகணிப்புகள் படி பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பான்மையான வெற்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீயூஸ் 18 இந்தியா கருத்து கணிப்புகள் படி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 13 முதல் 14 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சி 10 முதல் 12 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 26 முதல் 28 தொகுதிகளில் பாஜகவே வெற்றி பெறும் என ஆஜ் தாக் கணித்துள்ளது.
டெல்லியில் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என இந்தியா டிவி கூறுகிறது.
வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களின் முதல் புள்ளிவிவரங்கள்..
7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.