காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 120 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- ஆடியோ மூலம் பேசியுள்ளார் பிரயங்கா
- 'வதந்திகளை' நம்ப வேண்டும் என்று பிரயங்கா அறிவுறுத்தல்
- நமக்கு நல்ல பயன் கிடைக்கும்: பிரயங்கா காந்தி
New Delhi: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக-வுக்கு ஆதரவாக வந்துள்ளதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஓர் செய்தியை தெரிவித்துள்ளார் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.
“எனது அருமை காங்கிரஸ் தொண்டர்களே, சகோதரிகளே மற்றும் சகோதரர்களே… வதந்திகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு ஏமாந்து விடாதீர்கள். இந்த அனைத்து விஷயங்களுக்கு மத்தியிலும் நீங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அனைக்கு வெளியே மிக கவனத்துடன் பாதுகாப்பை மேற்கொள்ளுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து எடுத்த முயற்சி நமக்கு நல்ல பயனைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று ஆடியோ மூலம் காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசியுள்ளார் பிரியங்கா.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தம் இருக்கும் 543 இடங்களில் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 120 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனப்படுகிறது.
மம்தா பானர்ஜியின் சொந்த மாநிலத்தில் பாஜக, மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 12-ல் வெல்லும் எனக் கூறப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக, மேற்கு வங்கத்தில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கடந்த ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த போதும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக, கம்-பேக் கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
“தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப் புரளிகளை நான் நம்பத் தயாராக இல்லை. இந்த வதந்தி மூலம், பல்லாயிரக்கணக்கான ஈ.வி.எம் இயந்திரங்களை மாற்ற முயற்சி நடக்கும். நான் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும், ஸ்திரமாக, நம்பிக்கையுடன் தைரியமாக இருங்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்பிகிறேன். நாம் அனைவரும் இந்தப் போராட்டத்தை சேர்ந்து முன்னெடுப்போம்” என்று கருத்து தெரிவித்துள்ளார் மம்தா.
மம்தாவைப் போலவே, பிகாரின் ராஷ்டிரியா ஜனதா தளமும், “கருத்துக் கணிப்புகள் என்பது, செய்தி சேனல்கள், தங்களது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வெளியிடும் ஒன்று. வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த கட்சிக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படவில்லை என்றால், டிவி-யை அவர்கள் அணைத்துவிடுவர். இதனால் டி.ஆர்.பி ரேட்டிங் குறையும்” என்று கூறியுள்ளது.