சம்பவம் நடந்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
Guwahati: அசாமின் கவுகாத்தி நகரின் மையப்பகுதியில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. கவுகாத்தி வழியே செல்லும் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையோரத்தில் உள்ள கடை வீதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் நீண்ட நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துர்கா பூஜை பண்டிகை இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் குண்டுவெடிப்பு சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்தின்போது 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “ வெடிகுண்டு வெடித்ததா என்பதை நம்மால் உறுதியாக கூற முடியாது. இருப்பினும் இந்த சம்பவத்தில் சிலர் காயம் அடைந்துள்ளனர். இது தீவிரவாத செயல் என்று நாங்கள் சந்தேகம் கொள்ளவில்லை. சாலையோரம் அழுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றார்.
இதற்கிடையே நடந்திருக்கும் சம்பவத்திற்கு உல்ஃபா தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளதாக உள்ளூர் டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.