Sri Lanka Bomb Blast: சம்பவத்தின்போது வேன் ஒன்று வெடித்து சிதறியது.
இலங்கையில் சர்ச் அருகே இன்று மீண்டும் குண்டுவெடிப்பு நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டை இலங்கை சிறப்பு அதிரடிப் படையினர் செயலிழக்கம் செய்ய முற்பட்டபோது இந்த விபரீதம் நடந்திருக்கிறது.
ஈஸ்டர் பண்டிகை தினமான நேற்று, இலங்கையின்(Sri lanka) பல்வேறு இடங்களில் உள்ள சர்ச், நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன(Sri Lanka blasts). இந்த சம்பவத்தில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். 450-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் உள்ளூரில் செயல்படும் முஸ்லிம் அமைப்பு ஒன்று இதற்கு காரணமாக இருக்கலாம் என உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், மேலும் அதிர்ச்சியாக சர்ச் அருகே இன்று மீண்டும் குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. தலைநகர் கொழும்புவில் சர்ச் அருகே இன்று வெடிகுண்டு ஒன்றை செயலிழக்கம் செய்ய சிறப்பு அதிரடிப்படையினர் முயற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டனவா என்பது குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)