Air Pollution in Delhi - தீபாவளியைத் தொடர்ந்து டெல்லி மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.
New Delhi: பஞ்சாப் (Punjab) மற்றும் அரியானா (Haryana) மாநிலங்களில் விவசாய சுள்ளிகளை (Stubble burning) எரிப்பதனால் வெளிவரும் புகையால், டெல்லி உட்பட பல வட இந்திய மாநிலங்களில் காற்று மாசு (Air Pollution), உச்சக்கட்டத்தைத் தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரு மாநில அரசுகள், தங்கள் விவசாயிகள் அவர்களிடத்தில் உள்ள மீந்துபோன விவசாயப் பொருட்களை எரிப்பதை அணைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பஞ்சாப், அரியானா, டெல்லி மற்றும் மத்திய அரசிடம், காற்று மாசைக் கட்டுப்படுத்த நீண்ட நாள் திட்டத்தைப் பற்றி விளக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
10 Points:
1.'விவசாய சுள்ளிகள் எரிப்பது நிறுத்தப்பட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்,' என்று வட இந்திய காற்று மாசு குறித்தான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கருத்து தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.
2.'டெல்லி அரசு செய்ய வேண்டும்… மத்திய அரசு செய்ய வேண்டும்… என்று சொல்லிக் கொண்டே இருக்காமல், அனைவரும் கூடி நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது இந்திய குடிமக்கள் வாழும் உரிமையுடன் சம்பந்தப்பட்டது. இந்த விவகாரத்துக்கு, பாதிக்கப்பட்டுள்ள மாநில தலைமைச் செயலாளர்கள் முதல் பஞ்சாயத்துத் தலைவர்கள் வரை அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்,' என்று வழக்கு விசாரணையின்போது கூறியது நீதிமன்றம்.
3.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளான அருண் மிஷ்ரா மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய இருவர் அமர்வுக்குக் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
4.காற்று மாசு குறித்து வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகம் உள்ளிட்டவை மூலம் விளம்பரப்படுத்த வேண்டும் என்று கோர்ட் வலியுறுத்தியுள்ளது.
5.டெல்லி அரசு, காற்று மாசுக் கட்டுப்பாட்டுக்கு எடுத்துள்ள ‘Odd- Even' முறை குறித்தும் நீதிமன்றம், சந்தேகம் எழுப்பியது.
6.மத்திய அரசு, பஞ்சாபைச் சேர்ந்த 4 மாநிலங்கள் மட்டும் டெல்லியின் காற்று மாசுக்கு 44 சதவிகித காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.
7.டெல்லியில் எந்த வித கட்டுமானப் பணிகளும் நடக்கக் கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
8.அதேபோல டெல்லி நகருக்குள் டீசல் வாகனங்களுக்குத் தடை மற்றும் குப்பைகளை எரிக்கத் தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
9.தீபாவளியைத் தொடர்ந்து டெல்லி மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.
10.கடந்த வாரம் டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொது சுகாதார அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது.