This Article is From Jul 03, 2018

ஒரே வீட்டில் மரணித்த 11 பேரின் கண்கள் தானம் செய்யப்பட்டது

இறந்த குடும்பத்தினரின் கண்கள் குருநானக் கண் மையத்திற்கு தானமாக அளிக்கப்பட்டது

ஒரே வீட்டில் மரணித்த 11 பேரின் கண்கள் தானம் செய்யப்பட்டது
New Delhi:

வடக்கு தில்லியின் புராரியில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தின் 11 உறுப்பினர்களின் கண்களும் திங்கட்கிழமை ஒரு கண் வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டது.

இறந்த குடும்பத்தினரின் கண்கள் குருநானக் கண் மையத்திற்கு தானமாக அளிக்கப்பட்டது. எப்போதும் இந்த குடும்பம் மற்றவர்களுக்கு உதவ விரும்பியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இக்குடும்பம் எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் மற்றும் அவர்களின் கண்களை தானமாக கொடுத்து இறந்த பின்பும் அவர்கள் 22 பேருக்கு உதவ முடியும் ஒரு ஜோடி கண்களால் இரண்டு பேருக்கு பார்வை கொடுக்க முடியும், என "அக்குடும்பத்தின் உறவினர் ஒருவர் திங்கட்கிழமை செய்தியாளரிடம் கூறினார்.

தில்லியை சேர்ந்த குடும்பத்தில் 11 பேரின் மரணத்திற்கு காரணமான நிகழ்வுகளை போலீசார் விசாரிக்கும்போது, ​​விசித்திரமான மற்றும் திடுக்கிடும் விவரங்களை ஆராயந்துவருகின்றனர்.

பாட்டியா குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறைகளின் உடல்கள் வடக்கு தில்லி புராரியில் அவர்களின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன, அந்த குடும்பத்தின் மளிகை கடை ஞாயிறு காலை மூடப்பட்டிருந்ததை தொடர்ந்து பக்கத்தில் இருப்பவர் கண்டுபிடித்தார்.

ஆன்மிகம் வழிமுறையை பின்பற்றி, இந்த மரணங்கள் நடந்ததைக் குறிக்கும் வகையில் கடிதம் இருந்தது. அதைக் கைப்பற்றிய போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாராயண் தேவி என்ற 77 வயதான மூதாட்டி மட்டும் தரையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

நாராயண் தேவியின் மகள் பிரதிபா, 57, மகன்கள் பாவ்னெஷ் 50, மற்றும் லலித் பாட்டியா 45, மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளிட்ட 10 பேர் சீலிங்கில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.

.