This Article is From May 17, 2019

கலிபோர்னியா கட்டடத்தில் மோதிய போர் விமானம்; என்ன நடந்தது..?

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக, அரசு தரப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். 

கலிபோர்னியா கட்டடத்தில் மோதிய போர் விமானம்; என்ன நடந்தது..?

தென் கலிபோர்னியாவில் இருக்கும் மார்ச் விமான தளத்தில் F-16 போர் விமானத்தில், பைலட் ஒருவர் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

ஹைலைட்ஸ்

  • இந்த சம்பவத்தால் சிறிய தீ விபத்து ஏற்பட்டது
  • விமானி பத்திரமாக இருக்கிறார் என்று தகவல்
  • உள்ளூர் நேரப்படி மதியம் 3:30 மணிக்கு இவ்விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது
Los Angeles:

F-16 ரக போர் விமானம் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் ஒரு கட்டடத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. 

தென் கலிபோர்னியாவில் இருக்கும் மார்ச் விமான தளத்தில் F-16 போர் விமானத்தில், பைலட் ஒருவர் பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது எதிராபாராத விதமாக விமானம் வேர்ஹவுஸ் ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய விமானி பாதுகாப்பாக தப்பித்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் வேர்ஹவுஸில் இருந்த 5 பேருக்கு இந்த விபத்தினால் காயம் ஏற்பட்டுள்ளதாக ராணுவத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு ஏற்பட்ட காயம் குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. 

தற்போது, விமானி அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து அங்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனமான KCAL-TV, இந்த விபத்து குறித்து வீடியோ ஒன்றை வெளிட்டது. அதில் விபத்து மூலம், கட்டடத்தின் மேற்கூரை இடிந்துள்ளதும் சிறிய அளவு தீப்பற்றி எறிவதும் தெரிகிறது. 

இவ்விபத்தை அடுத்து இன்டர்ஸ்டேட் 215 வழித் தடம் மூடப்பட்டுள்ளது. இதை கலிபோர்டியா ஹைவே பேட்ரோல் உறுதி செய்துள்ளது. சாலை மார்க்கமாக வருவோர்களை, இவ்வழித்தடத்தை தவிர்க்குமாறு ஹைவே பேட்ரோல் கோரியுள்ளது. 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக, அரசு தரப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். 


 

.