2019 National Voters Day:18 வயதை எட்டிய புதிய வாக்காளர்கள் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வலியுறுத்தும் விதமாக நினைவு படுத்துகிறது
இந்தியா முழுவதும் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் தளங்கள் அதிக பிரபலமான தளங்களாகும். இந்த தளங்களில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி 18 வயதை எட்டிய புதிய வாக்காளர்கள் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வலியுறுத்தும் விதமாக நினைவு படுத்துகிறது.
கூகுள் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் மத்தியிலும் ஃபேஸ்புக் தன்னுடைய பயன்பாட்டாளர்கள் மத்தியிலும் இதை வலியுறுத்தி வருகிறது. ஃபேஸ்புக்கை சுமார் 200மில்லியன் இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்போதே பதிவு செய்யுங்கள் (Register Now) என்கிற பட்டனை அறிமுகப்படுத்துகிறது. இதை அழுத்தினால் தேசிய வாக்காளர்கள் சேவைக்கான தளத்தை திறக்கிறது. இந்த தளத்தில் 18 வயது நிரம்பியவர்கள் இதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக இந்த முயற்சியை செய்து வருகிறது. சமூக வலைதள நினைவூட்டல்கள் ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நினைவூட்டப்படுகிறது.