বাংলায় পড়ুন Read in English
This Article is From Sep 05, 2019

பேஸ்புக் பயன்படுத்தும் 40 கோடி பேரின் தகவல்கள் திருட்டு!! அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

பயனாளிகளின் மொபைல் எண்களை அறிந்து கொண்டு தேவையற்ற ஸ்பாம் கால்கள், வர்த்தக அழைப்புகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்சியின் ஐ.டி.யை ஹேக்கர்கள் ஹேக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
உலகம் Edited by

டெக் க்ரஷ் வெளியிட்டுள்ள தகவலை பேஸ்புக் நிறுவனம் பகுதி ஒப்புக் கொண்டுள்ளது.

Washington:

பேஸ்புக்கை பயன்படுத்தும் பயனாளிகளில் 40 கோடி பேரின் மொபைல் எண்கள் இணையதளம் ஒன்றில் பட்டியலிடப்பட்டிருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

டெக் க்ரஷ் என்ற அந்த செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 41.9 கோடி பேரின் மொபைல் எண்கள், இதர தகவல்கள் உள்ளிட்டவை வெளி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் 13 கோடி பேர் அமெரிக்கர்கள், 5 கோடிப்பேர்  வியட்நாமையும், 1.8 கோடி பேர் பிரிட்டனையும் சேர்ந்தவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சில பயனாளிகளின் ஐ.டி. பெயர்கள் தொலைப் பேசி எண்ணுடன் வெளியிடப்பட்டுள்ளன. சிலவை தொலைப்பேசி எண், இருக்கும் இடம் உள்ளிட்டவைகளுடன், சிலவை முக்கியமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. 

புதன்கிழமையான நேற்றுதான் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு டெக் க்ரஷ் செய்தி நிறுவன நிர்வாகிகள் பேசியுள்ளனர். அதுவரையில் பாதுகாப்பற்ற நிலையில்தான் பேஸ்புக்கின் பாஸ்வேர்ட் இருந்திருக்கிறது. அப்படியென்றால் யார் வேண்டுமானாலும், பேஸ்புக்கில் நுழைந்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். 

Advertisement

டெக் க்ரஷ் வெளியிட்டுள்ள தகவலை பேஸ்புக் நிறுவனம் பகுதி ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் 41 கோடி பேர் இருக்க வாய்ப்பில்லை என்று முக நூல் தெரிவித்திருக்கிறது. 

பயனாளிகளின் மொபைல் எண்களை அறிந்து கொண்டு தேவையற்ற ஸ்பாம் கால்கள், வர்த்தக அழைப்புகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்சியின் ஐ.டி.யை ஹேக்கர்கள் ஹேக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement