Read in English
This Article is From Jul 25, 2018

ஃபேஸ்புக் துணை நிறுவனம் சீனாவில் தொடக்கம்

பல ஆண்டுகளுக்கு பிறகு, சீனாவில் ஃபேஸ்புக் நிறுவனம் அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Advertisement
உலகம் (c) 2018 The Washington PostPosted by
San Francisco:

சான் பிரான்சிஸ்கோ: பல ஆண்டுகளுக்கு பிறகு, சீனாவில் ஃபேஸ்புக் நிறுவனம் அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 30 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில், சீனாவில் ஃபேஸ்புக்கின் துணை நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சீன சந்தையில் உள்ள வணிக பரிமாற்றம் முன்னேற்றம் அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

தற்போது, சீனாவில் ஃபேஸ்புக் பயன்பாடு முடக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, பேஸ்புக் நிறுவன உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க், சீன அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்ததை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

சீனாவில் அமைய உள்ள ஃபேஸ்புக் மையத்தின் மூலம்,  ஸ்டார்ட் அப் தொழில் தொடங்குபவர்கள் பயனடைவார்கள் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

முன்னதாக, சீன சந்தையில் கடந்த ஆண்டு, ‘கலர்புல் பலூன்ஸ்’ என்ற புடைகப்படம் பகிரும் ஆப்பினை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டது. பல ஆண்டுகளாக சீனாவில் ஃபேஸ்புக் பயன்பாட்டை திறக்க அந்நிறுவனம் முயன்று வருகிறது. சீனா நாட்டில்,ஏற்கனவே பல்வேறு சமூக வலைத்தளங்கள் உள்ளதால், இது சிக்கலாகவே இருந்து வந்தது. எனினும், சீன நாட்டில் ஃபேஸ்புக் அலுவலகத்தை திறக்க, அந்நிறுவனம் முழு முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement