Read in English
This Article is From Jan 30, 2019

20 டாலர் பணம் கொடுத்து ரகசியமாக தகவல் திரட்டும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கின் ஒனாவா அப்ளிகேஷனை போல உள்ள ஒரு ஆப்-யை ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் நிறுவனம் நீக்கியது.

Advertisement
உலகம்

ஃபேஸ்புக், பயன்பாட்டாளர்களிடம் அமேசான் ஆர்டர் விவரங்களையும் கேட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் ரகசியமாக ஃபேஸ்புக் ரிசர்ச் விபிஎன் பயன்பாட்டாளர்களிடம் அவர்களது டேட்டாக்களை எடுத்துக் கொள்வதற்கு பணமளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டெக் க்ரன்ச் அறிக்கையின்படி, "ஃபேஸ்புக் ரிசர்ச் ப்ரோக்ராம் மூலம் பயன்பாட்டாளர்களின் தகவல்களை பெறுகிறது என்றும் இதனை ஃபேஸ்புக் நிறுத்தும் எண்ணத்தில் இல்லை" என்றும் கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கின் ஒனாவா அப்ளிகேஷனை போல உள்ள ஒரு ஆப்-யை ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் நிறுவனம் நீக்கியது.

ஃபேஸ்புக் அதன் ரிசர்ச் ஆப்பை டவுன்லோட் செய்ய சலுகைகள் வழங்குவதாகவும் இது ஆப்பிள்  கொள்கைகளுக்கு எதிரானது என்றும் டெக் க்ரன்ச் தெரிவித்துள்ளது.

Advertisement

2016ம் ஆண்டிலிருந்து 13 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்களுக்கு மாதம் 20 அமெரிக்க டாலர் வரை பணம் கொடுத்து டேட்டாக்களை பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், பயன்பாட்டாளர்களிடம் அமேசான் ஆர்டர் விவரங்களையும் கேட்டுள்ளது.

Advertisement

அட்லாஸ் என்ற திட்டத்துக்காக அனைத்து தகவல்களையும் ஃபேஸ்புக் திரட்டி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement